கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" ஏர் பிடிக்கும் கைகளும், உழவர்களின் வியர்வையும் நிறைந்த பூமி! நெல் மணிகள் தலைவணங்கி வரவேற்கும் பூமி! தமிழகத்தின் நெற்களஞ்சியமான, காவிரித் தாயின் மடியில் தவழும் தஞ்சை பூமியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள் உழவர்களின் பெருமையை போற்றி, விவசாயத்தின் வளம் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை வலியுறுத்தி நிகழ்வை சிறப்பித்தார்.

தஞ்சாவூர்
4 மார்ச், 2026