காரைக்குடி தேர்தல் பிரசாரம்

காரைக்குடி
10 ஏப்ரல், 2026

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் வெற்றிகரமாக நடைபெற்றது. கண்ணதாசன் மணிமண்டபம் அருகே நண்பகல் 12.00 மணி முதல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் மக்கள் திரள் கலந்து கொண்டனர்.

இந்தப் பிரசாரத்தின் சிறப்பம்சமாக, தலைவர் அவர்கள் சைக்கிள் ஓட்டி மக்களிடம் சென்றது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. எளிமை, மக்கள் நெருக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பொதுமக்களிடம் உரையாற்றிய தலைவர் அவர்கள், கழகத்தின் நோக்கங்கள், முக்கிய கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திற்கான உறுதிப்பாட்டை விளக்கினார். பல்வேறு தரப்பினரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.