
தன் நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேட்கைக்கு உருவம் கொடுக்க,வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் உருவாக்கிய அரசியல் இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காக இயங்கும் முதன்மை இயக்கம் என்ற தீரா லட்சிய நோக்குடன் தொடங்கப்பட்டதே நம் த.வெ.க.

அரசியலில் மட்டுமன்று. பொதுவாகவே நமக்கு ஒரு பெரிய அடையாளம் வேண்டுமெனில், நமது பெயரே ஓர் அடையாளமாக மாற வேண்டும்.
ஒவ்வொரு பெயருக்கென ஒரு தனிப்பட்ட ஆற்றலும் சக்தியும் உண்டு. அத்தகைய ஆற்றலையும் சக்தியையும் கொடுப்பதே அப்பெயரில் இருக்கும் சொற்களின் வலிமைதான்.